மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் அறிவிப்பு

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக மீண்டும்

மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் புதிய ஆணையாளராக நிர்வாக சேவை  அதிகாரியான பொறியியலாளர் ந.சிவலிங்கம் தனது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இந்த நிலையில் இன்று பிற்பகல் அவரது நியமனம் மீளப்பெறப்பட்டு மீண்டும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளராக மா.தயாபரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வருக்கும் ஆணையாளர் தயாபரனுக்கும் இடையே முரண்பாடுகள் நிலவி வந்த நிலையில்,. மாநகரசபையின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் இன்று மாநகரசபைக்கு புதிய ஆணையாளர் கிழக்கு மாகாண ஆளுநரினால் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த நியமனம் பிற்பகல் மீளப்பெறப்பட்டு மீண்டும் ஆணையாளர் தயாபரனை நியமித்துள்ளார்.

பிரதமரின் அழுத்தம் காரணமாகவே இந்த நியமனங்கள் மீளப்பெறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ilakku Weekly Epaper 160 December 12 2021 Ad மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளராக மீண்டும் மா.தயாபரன் அறிவிப்பு