புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழா 40 ஊர்தி பவனிகளுடன் ஆரம்பமாகி மிகச்சிறந்த முறையில் இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் பண்பாட்டு பெருவிழாவானது இன்றையதினம்(18) மிகவும் பிரமாண்டமாக 40 ஊர்திகளுடன் பவனி வந்து பல கலை, பண்பாட்டு நிகழ்வுகளுடன் புதுக்குடியிருப்பு குழந்தையேசு ஆலயத்தின் முன்பாக ஆரம்பமானது.
இதனைத் தொடர்ச்து புதுக்குடியிருப்பு நகர்வழியாக வந்து கலாச்சாரத்தை பேணும் வகையில் ஊர்தி பவனியுடன் பிரத்தியேகமாக அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டியில் சிறப்பு விருந்தினர்கள் வரவழைக்கப்பட்டு புதுக்குடியிருப்பு மத்தியகல்லூரி பொன்விழா மட்டபத்தினை சென்றடைந்து கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதே நேரம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் பண்பாட்டு பெருவிழாவில் கலந்துகொண்ட தேவிபுரம் கிராமத்தின் கலை வெளிப்பாடுகள்…