மகாவலி ‘கே’ வலய உருவாக்கம் : வடக்கு – கிழக்கு மக்களின் குடிப்பரம்பலில் தாக்கத்தை ஏற்படுத்தும்!

மகாவலி ‘கே’ வலயம் புதிதாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். இந்த திட்டம் எங்கே உருவாக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது? இதற்காக பயன்படுத்தப்படவிருக்கின்ற காணியின் விஸ்தீரணம் எவ்வளவு?  இந்த ‘கே’ வலயத்திட்டத்தின் நோக்கம் என்ன? மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் தேசிய இன விகிதத்தின் பிரகாரம் நிலப் பகிர்வு மற்றும் வடக்கு கிழக்கு மாகாண மக்களின் குடிப்பரம்பல் மீது  தாக்கம் ஏற்படும் அச்சுறுத்தல் காணப்படுவதாக  இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற குழுத் தலைவரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற அமர்வின் போது நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் மகாவலி அபிவிருத்தித் திட்டம் மற்றும் கிவுல் ஓயா திட்டம் குறித்து காணி மற்றும் விவசாயத்துறை அமைச்சரிடம் அவர் இந்த கேள்விகளை முன்வைத்தள்ளார்.