கடந்த 2011 ஆம் ஆண்டு எம்பிலிப்பிட்டிய, முல்லையா பகுதியில் நபர் ஒருவரை படுகொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 10 சந்தேகநபர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
கொலையுடன் தொடர்புடைய வழக்கு இன்று எம்பிலிப்பிட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், மூன்று பெண்கள் உட்பட 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
நான்கு பெண்கள் உட்பட 12 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில் விசாரணைகளின் பின் இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏனைய 10 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.



