இலங்கையில் தொடர்ந்து அதிகரித்துச் செல்லும் கொரோனா மரணங்கள்

அதிகரித்துச் செல்லும் கொரோனா

அதிகரித்துச் செல்லும் கொரோனா: இலங்கையில் மேலும் 18 கோவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (05) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கோவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,083 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 145 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 589,479 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.