கோட்டா அரசுக்கு தொடரும் எதிர்ப்பு – இன்று பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்

403 Views

கோட்டா அரசுக்கு தொடரும் எதிர்ப்பு

கோட்டா அரசுக்கு தொடரும் எதிர்ப்பு

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கோட்டாபய ராஜபக்ச அரசுக்கு எதிராக இன்றும் போராட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

நுகோகொடை, விஜேராம சந்தியில் பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட எதிர்ப்புப் போராட்டம் சற்றுமுன்னர் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

இப்போராட்டத்தில் ஏராளமான பொதுமக்களும் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு முதல் நாளை காலை 6.00 மணி வரை மேல் மாகாணத்தில் காவல்துறை ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை தரப்பில் இவ் அறிவித்தல் சற்று முன்னர் விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply