மன்னாரில் தொடர்ச்சியாக சிற்றாலயங்கள் மீது தாக்குதல்

21 60ee92707ed57 மன்னாரில் தொடர்ச்சியாக சிற்றாலயங்கள் மீது தாக்குதல்

மன்னார்  காவல் துறைப் பிரிவில் உள்ள மூன்று இடங்களில் அமைந்துள்ள கத்தோலிக்க சிற்றாலயங்களில் உள்ள  சொரூபங்களை இன்று அதிகாலை இனம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர்.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்கலாக மூன்று சொரூபங்கள் மீதும் கற்கள் கொண்டு சேதப்படுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக மன்னார்  காவல் நிலையத்தில் முறைப்பாடு மேற் கொள்ளப்பட்ட நிலையில் மன்னார்  காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.

கடந்த மூன்று தினங்களில் 6 கத்தோலிக்க சிற்றாலயங்கள் மீது தாக்குதல் மேற் கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப் படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 மன்னாரில் தொடர்ச்சியாக சிற்றாலயங்கள் மீது தாக்குதல்