ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டன பேரணி

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டன பேரணி

ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டன பேரணி

இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, ஜனாதிபதி செயலகம் முன்பாக வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அத்தியாவசிய பொருட்களின் விலைகளை அதிகரித்துள்ள அரசாங்கத்திற்கு எதிராக அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வாழ்க்கைச் செலவை அரசாங்கம் தாங்க முடியாத அளவிற்கு உயர்த்தியுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியினர் இதன்போது குற்றம் சுமத்தியுள்ளனர். நாட்டின் பல பாகங்களில் இருந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பிற்கு பேரணியாக வருகை தந்து,  ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக  இன்று  (15) மாலை ஆர்ப்பாட்த்தை முன்னெடுத்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், ‘நாடு நாசம் – நாட்டைக் காப்போம்’ என்ற தொனிப்பொருளில்  இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த எதிர்ப்பு பேரணியில் ஐக்கிய ஊழியர் சங்கம், ஐக்கிய மகளிர் அமைப்பு, சிவில் அமைப்புகள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.

இந்நிலையில், ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பின் முக்கிய பகுதியான காலிமுகத் திடலிலுள்ள ஜனாதிபதி செயலக முன்றலை வந்தடைந்ததையடுத்து குறித்த பகுதியில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு அப்பகுதியை முற்றுகையிட்டுள்ளனர்.

இதையடுத்து விசேட அதிரடிப்படையினர், கலகத்தடுப்பு பிரிவினர் மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

Tamil News