திருகோணமலை சம்பவம் தொடர்பில் காவல்துறைக்கு எதிராக முறைப்பாடு!

திருகோணமலை சம்பவத்தில் பௌத்த மதகுருமார்களுக்கு காவல்துறையினர்  தாக்குதல் நடத்தியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பலாங்கொடை காசியப்ப தேரர் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் தலைமையகத்திற்கு திருகோணமலை விகாரையின் தலைமை விகாராதிபதியும் முறைப்பாடு செய்வதற்கு வந்திருந்தார். அதேநேரம், நீதிமன்றம் காசியப்ப தேரருக்கு மன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையும் அனுப்பியிருந்தது.

இது தொடர்பில் தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது, “அன்றைய சம்பவத்தில் காவல்துறையினர் தேரர்களை தாக்கி புத்தர் சிலையை எடுத்து சென்றது தேவையற்ற செயற்பாடாகும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

“எங்களை தாக்கியமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்வதே எமது நோக்கமாகும்.
பொலிஸ் உயர் அதிகாரிகளின் பணிப்பின் பேரிலேயே இது நடந்திருக்கலாம் என நினைப்பதோடு ஏதே ஒரு அரசியல் அழுத்தமும் இருப்பதாகவே தோன்றுகிறது” என்றும் அவர் கூறியுள்ளார்.