நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

346123043 668537755081037 2665087749673041243 n நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

முள்ளிவாய்க்கால் தமிழ்இனப்படுகொலையின் 14வருட நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை கொழும்பில் இடம்பெறவுள்ளன.

முள்ளிவாய்க்கால்  நினைவேந்தல் நிகழ்வுகள் நாளை காலை 10.30 மணிக்கு பொரளை கனத்தை சுற்றுவட்டத்தில் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

வடக்குகிழக்கில் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கான ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் நாளை கொழும்பில் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாளைய தினம் இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்துகொள்பவர்கள் வெள்ளை மலர்களை கொண்டுவரவும் என  ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.