கொழும்பு தாமரைக் கோபுரத்தை இன்று முதல் பார்வையிட அனுமதி

222 Views

கொழும்பு தாமரைக் கோபுரத்தின் செயற்பாடுகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், மக்கள் கோபுரத்தை பார்வையிட அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நாளை முதல், நாள் ஒன்றுக்கு 1400 முதல் 2000 பேருக்கு டிக்கெட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொது மக்கள் ரூ.500 மற்றும் ரூ.2,000 கட்டணங்களில் டிக்கெட்டுகளை வாங்கலாம். மேலும் பாடசாலை மாணவர்களுக்கான டிக்கெட் கட்டணம் ரூ.200 ஆகும்.

இதேவேளை வெளிநாட்டினருக்கான டிக்கெட் கட்டணம் 20 அமெரிக்க டொலர் ஆகும்.

வார நாட்களில் பிற்பகல் 2.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும், சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மதியம் 12.00 மணி முதல் இரவு 10.00 மணி வரையிலும் மக்கள் தாமரைக் கோபுரத்தை பார்வையிடலாம்.

Leave a Reply