இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் – இணை அனுசரணை நாடுகள் கவலை

86 Views

இலங்கையில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்ளில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக  கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து மனித உரிமை பேரவையில்  இலங்கை தொடர்பான தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கிய நாடுகள் கரிசனை வெளியிட்டுள்ளன.

அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுபவர்களிற்கு எதிராக கடுமையான பதில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது குறித்து  கடும் கரிசனை வெளியிட்டுள்ள இணை அனுசரணை நாடுகள் அமைதியான ஆர்ப்பாட்டங்களிற்கான அமைதியான விதத்தில் கருத்து வெளியிடுவதற்கான உரிமைகளை இலங்கை அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஆர்ப்பாட்டங்கள் தொடர்பான எந்த வன்முறை குறித்தும் பொறுப்புக்கூறல் அவசியம் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம் என தெரிவித்துள்ள இணை அனுசரணை நாடுகள் மனித உரிமைகளை பாதுகாப்பத ஊக்குவிப்பதில் சிவில் சமூகம் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

எதிர்காலத்தில் சமர்ப்பிக்கப்டக்கூடிய எந்த சட்டமூலம் மூலமாகவும்  சிவில் சமூகத்தின் செயற்பாட்டிற்கான தளத்தை பாதுகாக்கவேண்டியதன் அவசியத்தை நாங்கள் வலியுத்துகின்றோத் என தெரிவித்துள்ள இணை அனுசரணை நாடுகள் அனைத்து இனத்தவர்கள் சமயத்தவர்களின் உரிமைகளை பாதுகாப்பது குறித்த இலங்கையின் சமீபத்தைய வாக்குறுதியை வரவேற்றுள்ளன.

சுயேச்சையான ஸ்தபானங்கள் ஆட்சி மூலம் சட்டத்தி;ன் ஆட்சியை பாதுகாப்பது பிரதிநிதித்துவஜனநாயகத்தை உறுதி செய்யவேண்டியதன் முக்கியத்துவத்தையும் இணை அனுசரணை நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

Leave a Reply