Club De Paris இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு முன்,  ரணிலின் வரலாற்றுத்தவறுகளை கவனிக்க வேண்டுகோள்-அனைத்துலக ஈழத்தமிர் மக்களவை-

2023 ஜூன் 22 – 23 திகதிகளில் புதிய உலகளாவிய நிதி ஒப்பந்தத்திற்கான உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைப் பேசுவதற்காக அழைத்திருந்தார்கள்.  

இனப்படுகொலையாளரான ரணில் விக்கிரமசிங்கவின் வரலாற்றுத் தவறுகளை நாம் பட்டியலிட்டுக் காட்ட விரும்புகின்றோம். இலங்கையை விட்டு வெளியேறி, தற்போது பிரான்சு நாட்டின் பாதுகாப்பின் கீழ் வாழும் 100,000 க்கும் மேற்பட்ட தமிழர்கள் மற்றும் ஐரோப்பாவில் வாழும் கிட்டத்தட்ட 500,000 தமிழர்கள் மற்றும் உலகின் பிற பகுதிகளில் வாழும் சுமார் ஒரு மில்லியன் ஈழத்தமிழர்கள் சார்பாக, பின்வரும் உண்மைகளை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம் என்ற உள்ளடக்கத்துடன் அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை கடிதம் ஒன்றை பாரிஸ் கிளப்பிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பாரிஸ் கிளப்  (Club De Paris) இலங்கைக்கு நிதி உதவி வழங்குவதற்கு முன்னர் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கிய விடயங்கள்.

நிதி பிணையெடுப்பை வழங்குவதற்கு முன்னர் இலங்கை மீது நிபந்தனைகளை விதிக்குமாறு பிரான்ஸ் ஜனாதிபதி என்ற வகையில் தாழ்மையுடன் எங்கள் கோரிக்கைகளை முன்வைக்கின்றோம்.

சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள பாரதூரமான நிதி நெருக்கடிக்கு பல காரணங்கள் உள்ளன. வரவுசெலவுத் திட்டத்தில் 40 வீதத்தை சொந்த நாட்டு மக்களாகிய தமிழ்மக்கள் மீது நடைபெற்ற யுத்தம் ஒரு முக்கிய காரணியாகும். தமிழ் மக்களுக்கு எதிராக அடுத்தடுத்து வந்த இலங்கை அரசாங்கங்கள் பின்பற்றிய இனப்படுகொலை தமிழ்மக்களுக்கு எதிரான அரச கொள்கைகள் தமிழ் மக்களை அவர்களின் உரிமைகளுக்காகப் போராடத் தூண்டியது, இது 100000 ற்கும் மேற்பட்ட தமிழ் பொதுமக்களின் படுபாதகப் படுகொலையுடன் முடிவுற்றது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் யுத்தம் முடிவடைந்த போதிலும், நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத போதிலும், இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ச்சியாக அதிகரித்துள்ளன. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு தாயகப் பிரதேசங்களில் உள்ள தமிழ் மக்களை பாரியளவிலான இராணுவ மயமாகல் ஊடாக ஓரங்கட்டுவதற்கும் இத்தகைய செலவுகள் செய்யப்பட்டன என்பது தெளிவாகிறது. இலண்டனில் உள்ள சர்வதேச மூலோபாய கற்கைகள் நிறுவனத்தின்   (IIST) ஆய்வுகளின் படி உலகின் 30 பெரிய இராணுவங்களில், மக்களை ஆயத அடக்குமுறையின் வைத்திருக்கும் இராணுவமாக இலங்கை உலகளாவிய ரீதியில் 20 வது பெரிய இராணுவமாக நிற்கிறது என்று கணக்கிட்டுள்ளது. போருக்குப் பிந்தைய காலத்தை உள்ளடக்கிய பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் (17.28 பில்லியன் அமெரிக்க டொலர்) உள்நாட்டுப் போர் காலத்தை விட 14.92 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகமாகும்.

2018 ஆம் ஆண்டில், பாதுகாப்புப் படையினரின் மொத்த எண்ணிக்கை 317,000 க்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.  பெரும்பாலான முக்கிய இராணுவ அதிகாரிகள் இன அழிப்புப் போரின் போது இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருக்கமான கூட்டாளிகள் ஆவர். மற்றும் அவர்களுக்கு நாட்டிற்கு வெளியே முக்கிய இராஜதந்திர பதவிகள் வழங்கப்படிருந்தன அல்லது தற்போதைய அரசாங்க நிர்வாகத்தில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்களில் பலர் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை அறிக்கையில் மனிதகுலத்திற்கு எதிரான பல படுபாதகக் குற்றச் செயல்கள் புரிந்தவர்கள என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவடைந்ததில் இருந்து இராணுவத்தின் எண்ணிக்கை 200,000 இலிருந்து 300,000 க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது, மற்றும் அவர்கள் உள்ளுர் தமிழ் தொழிலாளர்களுடன் போட்டியிடும் வகையில் வணிக முயற்சிகளை மேற்கொள்வது, கட்டுமான ஒப்பந்தங்களில் ஈடுபடுவது, சிவில் நிர்வாகம் மற்றும் விவசாயம் போன்ற மக்களின் தொழில்களையும் அவர்கள் வருமானத்தையும் முடக்குகின்றனர்.

இலங்கையில் ஊழல் மலிந்து கிடக்கிறது என்பது ஒன்றும் இரகசியமான விடயம் அல்ல, கடந்த பதினைந்து ஆண்டுகளில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட கொள்வனவில் முழுமையான நிதித் தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியது மிக அவசியமாகும்.  The Transparency International 2015ம் ஆண்டு ஊழல் எதிர்ப்பு அறிக்கையின் படி இலங்கையில் ‘பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறைகளில் அதிக அளவிலான ஊழல் நடைபெற்றதாகத் தெளிவாகக் கூறுகிறது.

எனவே, பாதுகாப்பு போர்த் தளபாடங்கள் கொள்வனவில் மட்டுமின்றி, உர ஒப்பந்தங்கள், 2004 சுனாமி நன்கொடைப் பயன்பாடு, எண்ணெய் கசிவுக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்டவற்றுக்கும், நிதி தணிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கை அரசியல்வாதிகள் எவ்வாறு இலங்கையில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் ஆடம்பரச் சொத்துக்களையும் சொந்தமாக்கிக் கொண்டுள்ளனர், அரசாங்க சம்பளத்துடன் ஆடம்பரப் பொருட்களை எவ்வாறு சொந்தமாக்கிக் கொண்டனர் என்பது குறித்தும் கேள்வி எழுப்ப வேண்டியது அவசியமாகும்.

முறையான நிதித் தணிக்கை மேற்கொள்ளப்படாவிட்டால், ஊழல் அரசியல்வாதிகளின் கஜானாக்கள் உலக வங்கி வழங்கும் நிதியால் நிரப்பப்படும் அபாயம் மிக அதிகம். சர்வதேச சமூகத்தினால் நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைக் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் இன்றுவரை இணங்க மறுக்கிறது. பின்வரும் விடயங்கள் குறித்து இந்த நேரத்தில் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியமானதாகும்.

1. இலங்கைக்கு அதிகளவிலான ஏற்றுமதியை ஈட்டித்தருவது ஆடை உற்பத்தயாகும். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதற்கான ஆடைகளை உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகளை நிறுவியதன் மூலம் ஒரு சுதந்திர வர்த்தக வலயம் அமைக்கப்பட்டுள்ளது. ஆடை ஏற்றுமதியில் சீனா மற்றும் பங்களாதேசுடன் இலங்கை கடுமையான போட்டியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு நாடுகளும் குறைந்த விலை உற்பத்தியாளர்கள். ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் மற்றும் அமெரிக்காவின் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகைகளை இலங்கை நம்பியுள்ளது. நாட்டின் மனித உரிமைகள் உள்ளிட்ட 27 காரணிகளின் அடிப்படையில் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுகிறது. இலங்கையின் மோசமனா மனித உரிமைமீறல் செயற்பாடுகளைக் கவனத்தில் கொள்ளாமல் ஐரோப்பிய ஒன்றியம் ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கியதற்காக விமர்சனத்திற்கு உள்ளானது.

 • ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2009 ஆம் ஆண்டு உள்நாட்டுப் போரின் போது 70,000 க்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு இலங்கை அரசாங்கமே பொறுப்பு (இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் நடவடிக்கை குறித்த செயலாளர் நாயகத்தின் உள்ளக மீளாய்வுக் குழுவின் அறிக்கை). ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 46/1 தீர்மானத்தின் பிரகாரம் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட மனிதகுலத்திற்கு எதிரான படுபாதகக் குற்றச்செயல்கள் தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை இன்றுவரை ஒத்துழைக்க மறுத்துவருகிறது..

  எனவே, இலங்கையை அதன் நிதி நெருக்கடியில் இருந்து காப்பாற்ற முடிவு செய்யும் போது தீர்மானங்கள் அல்லது நிபந்தனைகளை எடுக்கும்போது பின்வரும் விடயங்களை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறோம்.

  இலங்கையின் பாதுகாப்பு அதன் அனுகூலமான மட்டத்திலிருந்து வேறுபடுவதற்கு ஆறு முதன்மையான காரணிகள் உள்ளன.

  1. 2009 இல் இலங்கையின் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் இலங்கை எதிர்கொள்ளும் புதிய மூலோபாய சூழல் மற்றும் சவால்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தால் விளக்கப்படாவிட்டால், அதன் பாதுகாப்பு செலவில் எந்தவிதமான மாற்றத்தையும் காணமுடியாது.

  2. இலங்கை அரசாங்கம் அதன் செயற்பாட்டின் மூலம், தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அவ்வப்போது மீளாய்வு செய்து, தேசிய பாதுகாப்பு நோக்கங்களை அல்லது அதன் பாதுகாப்பு செலவினங்களுக்கு ஏற்ப அவற்றை அடைவதற்கான மூலோபாயங்களை கோடிட்டுக் காட்டுகிறதா என்பது சந்தேகத்திற்குரியது.

  3. பாதுகாப்பு அமைச்சின் வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளை கேள்விக்குட்படுத்துவதற்கான நுண்மையான அறிவு திறைசேரிக்கும் தற்போதைய பாராளுமன்றத்திற்கும் இல்லை, எனவே திறைசேரி மற்றும் பாராளுமன்றம் வழங்கிய மேலோட்டமான முன்மாதிரி மறுஆய்வுக்கு வெளியே பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தை சுயாதீனமாக ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

  4. பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டம் எஞ்சியதாக இருக்கக்கூடாது (மற்ற அனைத்தும் ஒதுக்கப்பட்டவுடன் எஞ்சியிருக்கும்) அல்லது முந்தைய ஆண்டு ஒதுக்கப்பட்ட செலவினங்களை விட ஒரு குறிப்பிட்ட சதவீதம் மற்றும் தேசிய பாதுகாப்பு மூலோபாயங்களின் காரணிகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.

  5. அவசரகால விதிகளின் கீழ் தேவைப்பட்டால் தவிர, வணிக முயற்சிகள், கட்டுமான ஒப்பந்தங்கள் மற்றும் இதேபோன்ற சிவில் மேம்பாட்டு நடவடிக்கைகள் போன்ற பாதுகாப்பு அல்லாத விடயங்களில் இராணுவத்தை உட்படுத்துவது நிறுத்தப்பட வேண்டும். சிவில் நடவடிக்கைகளை இராணுவ மயமாக்குவது இலங்கையின் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்ட அதிகரிப்புக்கு ஒரு முக்கிய காரணியாகும்.

  6 பின்வருவனவற்றில் கவனம் செலுத்துவதன் மூலம் முறையான மதிப்பாய்வுகளை நடத்த வேண்டியது அவசியம்:
  அ. எவ்வளவு நிதி போதுமானது?
  ஆ. எப்படி சிறந்த முறையில் செலவு செய்வது?
  இலங்கையின் பாதுகாப்பு செலவினத்தை  ஆய்வுசெய்வதற்கு ஆவன செய்யப்படவேண்டும் என டிரான்ஸ்பரன்சி இண்டர்நேஸனல் பகுப்பாய்வு இந்த கருத்தை உறுதிப்படுத்துகிறது.

  ‘2015 ஆம் ஆண்டின் பாதுகாப்பு ஊழல் தடுப்பு அறிக்கையானது இலங்கையில் ‘பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புத் துறையில் ஊழலுக்கான மிக அதிக ஆபத்து’ இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கைக்கான மூன்று முக்கிய 17 பரிந்துரைகளில், இரண்டு வரவுசெலவுத் திட்ட வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பது மற்றும் சட்டமன்ற ஆய்வுக்கான பொறிமுறைகளை உருவாக்குவது பற்றியவை ஆகும்.

  மேற்கூறியவற்றின் அடிப்படையில், முறையற்ற மூலோபாயத்துடன் இலங்கையில் தேவையற்ற இராணுவச் செலவுகள், இலங்கையில் நிதி நெருக்கடிகளுக்கு வழிவகுக்கும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பது ஐயத்திற்கிடமின்றி தெளிவாகிறது.

  இலங்கையை காப்பாற்ற உலக வங்கி முயற்சிகள் எமுப்பதற்கு முன்னர் இலங்கையை தற்போதைய இக்கட்டான நிலைக்கு இட்டுச் செல்லும் சமகால பதிவுகளை பாரிஸ் கிளப் மீளாய்வு செய்வது நல்லது.
  ● கொள்கை ரீதியான நெருக்கடிகள்.
  ● பொருளாதார நெருக்கடிகள்.
  ● அரசியல் ரீதியான நெருக்கடிகள்.

  மேற்குறிப்பிட்ட காரணிகளைக் கருத்தில் கொண்டு, பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மட்டுமன்றி, இலங்கையில் அமைதி, நீதி, சமத்துவம், சுபீட்சம், சமாதானம் ஆகியவற்றை நிலைநாட்டும் வகையில் பன்மைத்துவ சமூகத்தை வாழ வழிவகுக்கும் வகையில் இலங்கை மீது உரிய நிபந்தனைகளை விதிக்குமாறு அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை சார்பாக பாரிஸ் மன்றத்தை  (Club De Paris) வலியுறுத்துகிறோம்.