தூய்மையான இலங்கை தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

Launch of 'Clean Sri Lanka' national initiative

புதிய வருடத்தில் “க்ளீன் ஶ்ரீலங்கா” (தூய்மையான  இலங்கை தேசிய வேலைத்திட்டத்துடன் உத்தியோகபூர்வ செயற்பாடுகள் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் இன்று காலை  ஆரம்பமாகியுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் நடைபெறுகின்றது.

இதேவேளை “க்ளீன் ஶ்ரீலங்கா”  நிகழ்ச்சித் திட்டத்தைத் தொடங்கும் தேசிய விழாவை அனைத்து அரசு மற்றும் தனியார் இலத்திரனியல் அலைவரிசைகள் ஊடாக ஒளிபரப்புவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதனைப் பார்க்கும் வசதியை அனைத்து அரச நிறுவன ஊழியர்களுக்கும் வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தூய்மையான இலங்கை உறுதிமொழியை வாசிக்க அனைத்து அரச ஊழியர்களும் நேரலையில் இணையுமாறு பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது.

அதே நேரம் இவ் வேலைத்திட்டசெயலணியில் தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.