சீனாவிலுள்ள மிருகக்காட்சிசாலைகளில் கண்காட்சிக்காக இலங்கை குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கு தேவையான அனைத்து ஆவணங்களையும் சீன நிறுவனம் ஒன்று விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம் கையளித்துள்ளது.
இந்த சீன நிறுவனம் முதலில் 500 குரங்குகளை வழங்குமாறு விவசாய அமைச்சிடம் கோரியிருந்த போதிலும், குறித்த நிறுவனத்தினால் தற்போது 1500 குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை வழங்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனம் மூலம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 100,000 குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சர் இந்த நிறுவனத்தின் முன்மொழிவை அமைச்சரவைக்கு சமர்ப்பிப்பார் மற்றும் பிரேரணையை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஆராய அமைச்சரவை உபகுழு நியமிக்கப்படவுள்ளது.
இந்த அமைச்சரவை உபகுழு வழங்கிய இறுதித் தீர்மானத்தின் அடிப்படையில் குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான இந்தப் பிரேரணை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.