அமெரிக்காவுக்கும் சீனா வுக்கும் இடையில் இடம்பெற்றுவரும் வர்த்தக மோதல்களின் எதிரொலியாக அமெரிக்கா வின் போயிங் போக்குவரத்து விமானங்களின் கொள்வனவை நிறுத்து வதற்கு சீனா முடிவு செய்துள்ளது அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போயிங் விமானத்தை கொள் வனவு செய்வதை நிறுத்துமாறு சீனா தனது சிமான நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக த புளும் பேர்க் ஊடகம் இந்தவாரம் தெரி வித்துள்ளது. சீனா மீது அமெரிக்கா 145 விகித வரியும், அமெரிக்கா மீது சீனா 125 விகித வரியும் விதித் துள்ள நிலையில் வர்த்தகப் போர் விரிவுபெற்று வருகின்ற சமயம் சீனா இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது. போயிங் விமானத்தின் உதிரிப்பாகங்களை கொள்வனவு செய்வதற்கும் சீனா தடை விதித் துள்ளது.
அமெரிக்காவின் பொருட்களுக்கு சீனா 125 விகித வரியை விதித்துள்ள நிலையில் விமானங்கள் மற்றும் அதன் உதிரிப்பாகங்களின் விலைகள் பல மடங்கு அதிகரிக்கும் என்பதால் அவற்றை பயன்படுத்தும் நிறுவனங்களின் செலவுகள் அதிகரிக்கும் என்பதால் அதனை நிறுத்த சீனா முடிவு செய்துள்ளது. சீன நிறுவனங்கள் தற்போது வாடகை கொடுத்து பயன்படுத்திவரும் போயிங் விமானங்களின் செலவுகளும் அதிகரிக்கலாம்.
சீனாவின் முக்கிய 3 விமான நிறுவனங்களான Air China, China Eastern Airlines and China Southern Airlines ஆகிய நிறுவனங்கள் தலா 45, 53 மற்றும் 81 போயிங் விமானங்களை அடுத்துவரும் இரு வருடங்களில் கொள்வனவு செய்ய திட்டமிட்டிருந்தன. அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு சீனா மிகப்பெரும் சந்தைவாய்ப்பாகும். போயிங் விமானத்தின் 25 விகித வாடிக்கையாளர்கள் சீன நிறுவனங்களே.