இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை வழங்கும் சீனா!

இலங்கைக்கு 100 நவீன சொகுசு மின்சாரப் பேருந்துகளை (Electric Buses) விரைவாக வழங்குவதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் சீ வொன் ஹோங் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் பயன்பாட்டினால் ஏற்படும் பாரிய சுற்றுச்சூழல் மாசடைவைக் குறைக்கும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வழங்கப்படவுள்ள இந்தப் பேருந்துகளில் ஒரு பேருந்தின் பெறுமதி சுமார் 225,000 அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பொதுப்போக்குவரத்துத் துறையில் நவீன மாற்றத்தை ஏற்படுத்த சீனா எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கண்டிக்கு விஜயம் செய்த சீனத் தூதுவர், மல்வத்து மகாநாயக்க தேரர் திட்டுவாவே ஸ்ரீ சுமங்கல நாயக்க தேரர் மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரர் ஆகியோரை நேற்று (22) நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

இந்தச் சந்திப்புகளின் போதே அவர் மேற்கண்ட தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்