தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று (10) முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.

அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இதன்படி, பிமல் ரத்நாயக்க போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சராகவும், அனுர கருணாதிலக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் எச்.எம். சுசில் ரணசிங்க வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் 10 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.