பிள்ளையானையும் வியாழேந்திரனையும் விவாதத்திற்கு வருமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு

IMG 1051 பிள்ளையானையும் வியாழேந்திரனையும் விவாதத்திற்கு வருமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனையும் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையானையும் கல்வி தொடர்பாக பேசுவதற்காக பகிரங்க விவாதத்திற்கு வருமாறு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு பொதுச் செயலாளர் பொன்.உதயரூபன் அழைப்பு விடுத்துள்ளார்.

மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

மாணவர்களுக்கு Tab வழங்கும் செயற்றிட்டமானது நீண்ட காலமாக முன்னெடுக்கப் பட்ட திட்டமெனவும் அது உலக வங்கியின் நிதி உதவியுடன் செயற்படுத்தப் படும் நிலையில், அதனை அரசியல் நிகழ்வாக செயற்படுத்தப் படுவதை வன்மையாக கண்டிப் பதாகவும் தெரிவித்துள்ளார்.

இலசவ கல்வியை வியாபாரமாக நடாத்திய வியாழேந்திரனும் பல கல்விமான்களை கிழக்கு பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றிய பிள்ளையானும் கல்விக் கொள்கைக்கு முரணாக இந்த Tab-களை தாங்கள் வழங்குவதாக தெரிவித்து வரும் கருத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் தனது வன்மையான கண்டனத்தினை தெரிவிப்ப தாகவும் அவர் கூறியுள்ளார்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 138

ilakku Weekly Epaper 138 July 11 2021 e1626027838912 பிள்ளையானையும் வியாழேந்திரனையும் விவாதத்திற்கு வருமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் அழைப்பு

Leave a Reply