தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்துக்கு அழைப்பு !

தையிட்டி விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண காணி உரிமைக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரன் குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார். ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கும் போது அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக நாளைய தினம் (03) நடத்தப்பட விருக்கின்ற எதிர்ப்பு போராட்டத்திற்கு கட்சிகள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரையும் கலந்து கொண்டு எதிர்ப்புக்களை பதிவு செய்யுமாறு அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிங்கள மற்றும் இஸ்லாமியர்கள், தமக்கு ஒரு பிரச்சினை வரும்போது தங்களது பிரிவினையை மறந்து ஒற்றுமையாக ஓன்று சேருந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இருப்பினும், தமிழர்கள் பல்வேறு வகையில் பிரிந்திருக்கின்றோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தையிட்டி காணி தொடர்பாக ஆரம்ப இணக்கப்பாட்டுடன் பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
எனினும் இறுதி இணக்கப்பாடு எட்டப்படாத காரணத்தால் நாளைய பௌர்ணமி தினத்தில் வழமை போன்று போராட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.