நிலக்கரியை அவசரகால அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி…

எதிர்வரும் மாதங்களில் நாட்டில் ஏற்படக்கூடிய மின்சக்தி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக, நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்குத் தேவையான நிலக்கரியை அவசரகால அடிப்படையில் கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

தென்னாப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி கையிருப்புகளின் தரம் குறைவாக இருந்ததன் காரணமாகவே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய சவால்கள் மற்றும் தற்போதைய நிலைமை:

* பருவமழை தாக்கம்: மே மாதத்தில் பருவமழை ஆரம்பமாவதோடு கடல் கொந்தளிப்பாக மாறுவதால், நிலக்கரியை தரையிறக்குவது கடினமாகும். அதற்கு முன்னர் போதிய கையிருப்பை உறுதி செய்யாவிட்டால், நாடு பாரிய மின்சார நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும் என அதிகாரிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

* தரக் குறைபாடு: தென்னாப்பிரிக்காவிலிருந்து 60,000 மெட்ரிக் தொன் நிலக்கரியுடன் வந்த முதல் கப்பலின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில், அவை தரமற்றவை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, அரசாங்கம் அந்தப் கப்பலுக்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்துள்ளது.

* விநியோக நிலைமை: குறித்த விநியோகஸ்தரின் கீழ் 23 கப்பல்கள் வரவிருந்த நிலையில், அவற்றில் 9 கப்பல்கள் ஏற்கனவே பயணத்தை ஆரம்பித்துள்ளன. முதல் கப்பலின் நிலக்கரி தரம் குறைந்ததாக இருந்ததால், ஏனைய கப்பல்களையும் கடுமையான தரப் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள்:

இந்த நிலக்கரி டெண்டர் நடைமுறை தொடர்பாக கடுமையான ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தென்னாப்பிரிக்க நிலக்கரியை இறக்குமதி செய்த இந்திய நிறுவனத்திற்கு சாதகமாக டெண்டர் நிபந்தனைகள் திருத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக, வழக்கமாக 42 நாட்களாக இருக்கும் டெண்டர் காலம் 21 நாட்களாகக் குறைக்கப்பட்டமை பெரும் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

இந்தக் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் உடனடியாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

எதிர்காலத் திட்டங்கள்:

அவசர கொள்வனவுகளுக்கு மேலதிகமாக, நிலக்கரி விநியோகத்தின் நீண்டகாலத் தொடர்ச்சியை உறுதி செய்வதற்காக புதிய காலவரையறை