இந்தோனேசியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த 185 ரோஹிங்கியா அகதிகள் 

135 Views

வங்கதேச அகதி முகாம்களில் இருந்து வெளியேறிய 185 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகள் படகு மூலம் இந்தோனேசியாவின் அச்சே மாகாணத்தில் நேற்று (ஜனவரி 8) தஞ்சமடைந்திருக்கின்றனர். 

அச்சே பகுதி பேரிடர் முகமையைச் சேர்ந்த அதிகாரி ஒருவரின் கூற்றுப்படி, அதில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி 7ம் திகதி இந்தோனேசிய அரசு ஊடகமான அன்டாரா வெளியிட்ட செய்தியின் படி, Rondo தீவு அருகே மூன்று படகுகளை அச்சே பகுதி மீனவர்கள் கண்டிருக்கின்றனர். இப்படகுகளில ரோஹிங்கியா அகதிகள் இருக்கக்கூடும் என அவர்கள் சந்தேகித்திருந்தனர். அதே சமயம், இப்படகு அதில் ஒன்றா என்று இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை.

2022ம் ஆண்டு இறுதியில் ஐ.நா.அகதிகள் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, ஆறு வாரங்களில் சுமார் 500 ரோஹிங்கியா அகதிகள் இந்தோனேசியாவில் தஞ்சமடைந்திருந்தனர்.

Leave a Reply