மன்னாரில் மாபெரும் குருதி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குருதி கட்டுப்பாட்டினை ஓரளவிற்கேனும் நிவர்த்தி செய்யும் வகையில் மன்னார் அடம்பன் சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவும் மாந்தை மேற்குப் பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மாபெரும் குருதி  வழங்கல் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் எஸ் கேதீஸ்வரன் அவர்கள் தலைமையில் அடம்பன் வைத்திய சாலையில் நடைபெற்றது.

IMG 20210711 094837 மன்னாரில் மாபெரும் குருதி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது

இந்த  நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் மிகவும் ஆர்வத்துடன் குருதி வழங்கி யிருந்தார்கள்.

மதத் தலைவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்த இந்த குருதி வழங்கல் நிகழ்விற்கு மன்னார் வாழ்வுதயம் மற்றும் தம்பிராசா அறக் கட்டளை  அனுசரணை வழங்கி யிருந்தார்கள்.

இதன் போது குருதி வழங்கிய இளைஞர் யுவதிகளுக்கான சத்துணவு பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 மன்னாரில் மாபெரும் குருதி வழங்கல் நிகழ்வு நடைபெற்றது

Leave a Reply