தமிழ் மக்களுக்கு எதிராக கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றிற்கு தமிழ் மக்கள் அனைவரையும் ஒன்று திரண்டு வருமாறு அருட்தந்தை மா.சத்திவேல் அழைப்பு விடுத்துள்ளார்.
1983ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிராக மேற் கொள்ளப்பட்ட இனவாத தாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றினையும் தொடர்ந்து நடக்கும் இனவாத வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திலும் மக்களை கலந்து கொண்டு ஆதரவு தருமாறு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
குறித்த கலந்துரையாடல் எதிர்வரும் 2021.07.20 திகதி செவ்வாய் கிழமை கொழும்பு மருதானை C.S.R மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு நடத்த இருப்பதாகவும் மக்கள் அனைவரையும் குறித்த கலந்துரையாடலில் கலந்து கொள்வதோடு அதனைத் தொடர்ந்து கொழும்பு லிப்ரன் சுற்று வட்டத்தில் தொடர்ந்து நடக்கும் இனவாத வன் முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடக்கும் ஆர்ப்பாட்டதிலும் கலந்து கொண்டு தமிழ் மக்களை தமக்கு ஆதரவு தாருமாறு அருட்தந்தை மா.சத்திவேல் ஊடகங்கள் மூலமாக தகவல் விடுத்துள்ளார்.