அமெரிக்க அதிபர் ட்ரம்பின் போர் தொடர்பான அதிகாரங்களைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட மசோதா நிறைவேறவில்லை.
இந்த மசோதாவுக்கு ஆதரவாக 47 உறுப்பினர்கள் வாக்களித்தனர், அதே நேரத்தில் அதற்கு எதிராக 53 வாக்குகள் பதிவாகின. அதாவது, ட்ரம்புக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மசோதாவுக்கு ஆதரவாக குறைவான வாக்குகளே கிடைத்தன.
இந்த மசோதா நிறைவேறியிருந்தால், போர் தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கான அமெரிக்க அதிபரின் அதிகாரங்கள் குறைந்திருக்கும். இந்த மசோதாவின்படி, போர் தொடர்பான எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கு முன்னால், டிரம்ப் அமெரிக்க காங்கிரஸின் (நாடாளுமன்றம்) அனுமதியைப் பெற வேண்டியிருந்திருக்கும்.
பிப்ரவரி 28 அன்று அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து இரான் மீது தாக்குதல் நடத்தின. இதற்குப் பதிலடியாக, இரான் தரப்பிலிருந்து அமெரிக்க ராணுவத் தளங்கள், இஸ்ரேல் மற்றும் பிற இடங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. இந்த மோதலுக்குப் பிறகு அமெரிக்க செனட்டில் கொண்டு வரப்பட்ட இத்தகைய முதல் மசோதா இதுவாகும், ஆனால் இது டிரம்பைத் தடுப்பதில் தோல்வியடைந்துள்ளது.



