வடமாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் தமது கிறிஸ்தவ சபையின் பைபிள் நூலினை வழங்குவதற்கு நிறுவனம் ஒன்று வட மாகாண மேலதிக மாகாண கல்வி பணிப்பாளரிடம் அனுமதி கோரிய நிலையில் , பாடசாலைகளில் மாணவர்களுக்கு நூலினை அன்பளிப்பு செய்வதற்கு அவர் அனுமதி வழங்கியுள்ளார்.
குறித்த அனுமதி கடிதம் சமூக ஊடகங்களில் வெளியான நிலையில், அதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பாடசாலைக்குள் மத மாற்றம் செய்யும் நோக்குடன் கிறிஸ்தவ சபை ஒன்றின் பைபிள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து தற்போது குறித்த கிறிஸ்தவ சபையை சேர்ந்த மாணவர்களுக்கு மாத்திரம் வழங்குமாறு கடிதம் மூலம் பைபிளை வழங்க முற்பட்டவர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடும் பல கேள்விகளை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.



