இலங்கை புறப்படுவதற்கு முன்னர் அமெரிக்காவின் இராஜாங்க செயலாளரை சந்தித்தார் இலங்கைக்கான புதிய தூதுவர்

391 Views

இலங்கை புறப்படுவதற்கு முன்னர்இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் ஜூலி சங் இலங்கை புறப்படுவதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்டனை சந்தித்துள்ளார்

இந்த சந்திப்பின்போது இலங்கை குறித்து அவர் இராஜாங்க செயலாளருக்கு தெளிவுபடுத்தியுள்ளார். விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் நான் இராஜாங்க செயலாளரை சந்தித்தேன் என அவர் ருவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவராக பணிபுரிவதை பெருமையாக கருதுகின்றேன் எங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும்- எங்கள் பகிரப்பட்டவிழுமியங்களை ஆராயவும்,எங்கள் உறவுகளை வலுப்படுத்தவும் இலங்கை அரசாங்கத்துடனும் சிவில்சமூகத்துடனும்,உங்களுடனும் இணைந்து பணியாற்ற ஆர்வமாக உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply