பஸில் ராஜபக்‌ஷ நாளை எம்.பி.யாக பதவிப் பிரமாணம்

basil rajapakshe 500 பஸில் ராஜபக்‌ஷ நாளை எம்.பி.யாக பதவிப் பிரமாணம்

சிறீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்ஷ நாளை வியாழக்கிழமை காலை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமா ணம் செய்யவுள்ளார் எனத் தெரிய வருகின்றது.

இந்தத் தகவலை பொதுஜன பெரமுன உறுப்பினர் ஒருவரும் உறுதிப் படுத்தினார். பஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் வருவதற்காக, பொதுஜன பெரமுன கட்சியின் தேசி யப் பட்டியல் உறுப்பினர் ஜயந்த கொட்டகொட நேற்று எம்.பி.பதவியை துறந்தார். இதனால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கு பஸில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல்கள் ஆணைக் குழுவுக்கு முன்மொழியப் பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தல் ஆணைக் குழு இன்று காலை கூடுகின்றது. அதன் பின்னர் பஸிலின் பெயர் வர்த்தமானியில் வெளியாகும்.

இலக்கு இந்த வார மின்னிதழ் 137

ilakku Weekly Epaper 137 July 04 2021 பஸில் ராஜபக்‌ஷ நாளை எம்.பி.யாக பதவிப் பிரமாணம்