சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி

IMG 20240911 WA0113 சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி விழிப்புணர்வுப் பேரணி

சிறுவர் உரிமைகளை பாதுகாக்க கோரி விழிப்புணர்வு நடைபவனியானது ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஆரம்பமாகி நடைபெற்றிருந்தது.

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு ‘நாம் சிறுவர் எம்மை காப்பீர்’ எனும் தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பேரணி, ஒட்டுசுட்டான் பிரதேச சிறுவர் பூங்காவில்  ஜெப ஆலயமிஷன் திருச்சபையின் கீழ் இயங்கும் பெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில்  நடைபெற்றிருந்தது.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு மன்னிப்பு இல்லை, குழந்தைகளின் சிறப்பான எதிர்காலத்திற்காக நாம் நமது நிகழ்காலத்தை தியாகம் செய்வோம், அமர்த்தாதே அமர்த்தாதே சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களுக்கான சிறுவர் நேயமுள்ளதும் பாதுகாப்பு மிக்கதுமான சூழலொன்றை கட்டியெழுப்புவோம், அம்மா அப்பா, அக்கா, அண்ணா, என்னைத் திட்டாதீர்கள் நான் சின்ன பிள்ளை, வன்முறைகளிலிருந்து சிறுவர்களை நாம் பாதுகாப்போம் போன்ற பல்வேறு பதாதைகள் தாங்கிய விழிப்புணர்வு பதாதைகளுடன் நடைபவனி இடம்பெற்றிருந்தது .

குறித்த பேரணியில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ம.வினோத் , வெத்தேல் சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் இயக்குனர் காலேப் மற்றும் உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.