406 Views
ஆப்கான் அகதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய கடமை
ஆப்கானிஸ்தானிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகளை சிறப்பு திட்டத்தின் மூலம் அவுஸ்திரேலியாவுக்குள் எடுக்க வேண்டும் என்றும் அவுஸ்திரேலியாவுக்கு அதைவிட மேலதிகமாக செய்ய வேண்டிய தார்மீக கடமை உள்ளதாக அவுஸ்திரேலிய கத்தோலிக்க ஆயர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆப்கானிஸ்தானில் அவுஸ்திரேலிய இராணுவ படையினருக்கு காட்டப்பட்ட ஆதரவின் அடிப்படையில் மேலும் பல அகதிகளை அனுமதிக்க வேண்டிய கடமை அவுஸ்திரேலிய அரசு உள்ளது என அவுஸ்திரேலிய தேர்தலுக்கான அறிக்கையின் அங்கமாக கத்தோலிக்க ஆயர்கள் இதனை தெரிவித்திருக்கின்றனர்.