மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் உள்ள மீனவர் அமைப்புகள் மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
வாகரை பகுதியில் கரைவலை மீன்பிடியில் ஈடுபடுவோர் பெருளமானோர் மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் உள்ள வாவிக்கரை வீதியால் சென்று கடற்தொழில் நிரியல்வள திணைக்களத்திற்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீண்டகாலமாக கரை வலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களே இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தாங்கள் நீண்டகாலமாக கடல்தொழிலில் ஈடுபட்டுவருவதுடன் உழவு இயந்திரங்களை பயன்படுத்தி வருவதுடன் தற்போது உழவு இயந்திரங்களை பயன்படுத்தி கரைவலை இழுப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதனால் மீனவர்கள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது மட்டக்களப்பு கடற்தொழில் நிரியல்வள திணைக்கள உதவி பணிப்பாளர் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு வருகைதந்து போராட்டத்தில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடியதுடன் அவரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.




