சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேலின் தாக்குதல் நான்காவது நாளை எட்டியுள்ளது. தலைநகர் டெஹ்ரான் உள்பட ஈரான் முழுவதும் உள்ள முக்கிய இலக்குகளை குறிவைத்து இரு நாடுகளும் பரவலாக தாக்குதலைத் தொடர்கின்றன.
இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் அமெரிக்காவுக்குள்ள இராணுவ தளங்கள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்துகிறது.
இந்த நிலையில்,சவூதியில் உள்ள அமெரிக்க தூதரகம் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.
மேலும் ஜோர்டானில் அமெரிக்க தூதரகப் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். மத்திய கிழக்கில் உள்ள தனது குடிமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
அதேநேரத்தில், உலகின் முக்கிய கச்சா எண்ணெய் போக்குவரத்துப் பாதையான குறுகிய ஹோர்முஸ் நீரிணை வழியே செல்லும் கப்பல்கள் தாக்குதலுக்கு இலக்காக நேரிடும் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கு வித்திட்டுள்ளது.



