அமெரிக்காவின் மிகப்பெரும் செல்வந்தரும், உலகத்தின் முதலாவது மிகப்பெரும் செல்வந் தருமான எலான் மஸ்க்கின் மீதான தாக்குதல்கள் அமெரிக்கா, கனடா ஆகிய நாடுகளை தொடர்ந்து தற்
போது ஐரோப்பாவிலும் பரவியுள் ளது.
கடந்த திங்கட்கிழமை(31) இத்தாலியின் றோம் நகரில் அமைந்திருந்த ரெஸ்லா நிறுவனத்தின் வானகங்கள் மீது மேற்கொள்ளப் பட்ட எரிகுண்டு தாக்குதலில் 17 இற்கு மேற்பட்ட வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன. கார்களுக் கான உதிரிப்பாகங்கள் மற்றும் கட்டிடமும் எரிந்து அழிந்துள்ளது.
இந்த தாக்குதல் உரு பயங்கர வாதத் தாக்குதல் என இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ருவிட்டர் மற்றும் ரெஸ்லா நிறுவனத்தின் தலைவர் மஸ்க் தெரிவித்துள்ளார். ரெஸ்லா நிறுவனத்தில்கு எதிரான தாக்குதல்கள் அமெரிக் காவிலேயே முதலில் ஆரம்பித்திருந்தது அது தற்போது உலகின் ஏனைய நாடு களுக்கும் பரவி வருகின்றது.
ஜேர்மனியிலும் பல நகரங்களில் ரெஸ்லா வாகனங்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள் ளப்பட்டுள்ளன. பேர்ளினில் பல வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதுடன், வேர்டன் நகரில் 7 கார்கள் முற்றாக எரிக்கபபட்டுள்ளன. கனடா விலும் 80 இற்கு மேற்பட்ட வாகனங்கள் சேதப் படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் இடம்பெற்ற தாக்குதல் கள் குறித்து எப்.பி.ஐ விசாரணைகளை நடத்தி வருவதாகவும், இது ஒரு உள்ளூர் பயங்கரவாதச் செயல் எனவும் எப்.பி.ஐயின் பணிப்பாளர் காஷ் பட்டேல் தெரிவித்துள்ளார். திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படும் இந்த தாக்குதல்களை தடுப்பதற்கும் அதற்கு பொறுப்பானவர்களை தண்டிப்பதற்கும் தாம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் புதிய அரச தலைவர் டொனால்ட் ட்றம்புடன் இணைந்து பணியாற்றும் மஸ்க் அமெரிக்காவில் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு பல மாற்றங்களை மேற்கொண்டு வருவது அமெரிக்காவில் அவருக்கு எதிரான எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ள அதேசமயம், ஏனைய உலக நாடுகள் மீது அமெரிக்கா மேற் கொண்டுவரும் வரி உயர்வுகளும் அமெரிக்கா மீதான எதிர்ப்புணர்வை பல ஐரோப்பிய நாடுகளில் ஏற்படுத்தி வருகின்றது.



