முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதல்: படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

391 Views

ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமானமுள்ளிவாய்க்கால் பகுதியில் முல்லைத்தீவு பிராந்திய ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

Lankasri ஊடக நிறுவனத்தின் முல்லைத்தீவுப் பிராந்திய ஊடகவியலாளர் விஸ்வலிங்கம் விஷ்வசந்திரன் என்பவரையே நான்கு இராணுவத்தினர் சேர்ந்து மூர்க்கத்தனமாகத் தாக்கியுள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் அவர் முல்லைத்தீவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் பெயர்ப் பலகையை புகைப்படம் எடுத்த சமயம், ஏன் எடுக்கின்றாய் என கேட்டே ஊடகவியலாளர் மீது நான்கு இராணுவத்தினரும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

ஊடகவியலாளர் மீது இராணுவம் மூர்க்கத்தனமானசம்பவ இடத்தில் வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிசன்னமாகியிருக்கின்றார்.

Leave a Reply