இலங்கையில் அரசுக்கெதிரான போராட்டத்தில் பேராயர் பங்கேற்பு

அரசுக்கெதிரான போராட்டத்தில் பேராயர்

அரசுக்கெதிரான போராட்டத்தில் பேராயர்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு கோட்டாபய மஹிந்த அரசாங்கமே காரணம் என தெரிவித்து நாடளாவிய ரீதியில் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் தென்னிலங்கையில், தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மாபெரும் தொடர் போராட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

கோட்டாபயவின் இல்லம், மஹிந்தவின் இல்லம், சமல் ராஜபக்ஷவின் இல்லம் மற்றம் அமைச்சர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவருக்கும் எதிரான முற்றுகைப் போராட்டங்கள் இடம்பெற்ற வருகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் நடத்திவரும் அமைதியான போராட்டங்களில் கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் கலந்துகொண்டுள்ளார்.