இலங்கைக்கு விஜயம் செய்துள்ள வத்திக்கானின் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளுடனான உறவுகளுக்கான வெளியுறவு அமைச்சர் பேராயர் போல் ரிச்சர்ட் கல்லாகர் (Paul Richard Gallagher) பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்தச் சந்திப்பு திங்கட்கிழமை ( நவம்பர் 3 ) அலரி மாளிகையில் இடம்பெற்றுள்ளது.
வத்திக்கான் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தூதுக் குழுவில் கொழும்பில் உள்ள புனிதப் பேரார் தூதரகத்தின் பொறுப்பாளர் மான்சிந்யோர் ராபர்டோ லுச்சினி (Monsignor Roberto Lucchini) மற்றும் புனிதப் பேராயர் வெளியுறவுச் செயலகத்தின் இரண்டாவது செயலாளர் மான்சிந்யோர் டோமிஸ்லாவ் ஜுபாக் (Monsignor Tomislav Zubac) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.



