தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜே.வி.பியை ஆதரிக்கவேண்டும் – யாழில் அநுரகுமார

anura தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜே.வி.பியை ஆதரிக்கவேண்டும் - யாழில் அநுரகுமார“வடக்கு -கிழக்கு மக்களின் ஆணை இல்லாத ஆட்சி நாட்டை முன்னேற்றாது. ஆகையனால் அனைத்து மக்களின் ஆணையுடனான ஆட்சி அமையப் பெறவேண்டும். அவ்வாறு இன, மத பேதமில்லாத ஆட்சி அமைய வேண் டுமானால் தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் எமக்கான ஆதரவை வழங்க வேண்டும்” என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸநாயக்க யாழ்ப்பாணத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழில் நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கத்தின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டின் முன்னேற்றம் இன, மதம், மொழி கடந்து ஒற்றுமை யுடன் இணைந்து செல்லும் போதே மேலும் மேலும் நாட்டை முன்னேற்ற முடியும். எனவே வடக்கு -கிழக்கில் வாழும் சகோதரர்களின் ஆணையில்லாமல் நாட்டை முன்னேற்ற முடியாது. இதுவே காலம் காலமாக நடந்து வந்த நிலையில் இம்முறை அனைவரதும் ஆதரவை பெற்ற ஆட்சியை அமைக்க வேண்டும்.

4444 தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் ஜே.வி.பியை ஆதரிக்கவேண்டும் - யாழில் அநுரகுமாரஆகையால் அனைவரது முன்னேற்றத்திற்கும் எமக்கான ஆதரவை ஒருமித்து வழங்க வேண்டும். அவ்வாறு சகலரது ஒத்துழைப்புடனும் ஆதரவுடனும் ஆட்சி அமைக்கப்படுகிற போது எந்தவித பாகுபாடுகளுமின்றி ஆட்சி அமையப்பெறும். இதனூடாக நீண்ட காலமாக இருந்து வருகின்ற பிரிவினை அரசியலுக்கு முடிவு காட்டி இன, மத பேதமில்லாத ஒன்றிணைந்த அரசியலை மேற்கொள்ள எம்முடன் அனைவரும் வாருங்கள்.

எனவே, அனைவரும் சம உரிமைகளு டன் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் வாழக் கூடியதான ஆட்சி அமையப் பெறு வதற்கு எமக்கான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குங்கள் என இங்கு வைத்து தமிழ்க் கட்சிகளின் தலைவர் களிடம் கோருகின்றோம்” என்று தெரிவித்தாா் அநுர குமார திஸாநாயக்க.