சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை இம் மாதம் 20 திகதி அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளது.
மேலும் இதற்கான எழுத்துமூலமான அழைப்பை மருதங்கேணி பொலிஸார் வழங்குவார்கள் என அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.
இவர் சமூக செயற்பாட்டாளராக , காணி உரிமை, மீனவர்கள் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகுன்ற நிலையில் தற்போது கொழும்பில் காணி உரிமை தெடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் இ்ந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.