பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமும், அநுரவின் நடைப்பயணமும் :அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம்

அனைத்துலக உயிரோடை தமிழ் வானொலி மற்றும் இலக்கு மின்னிதழ் நேயர்களுக்கு வணக்கம். இன்றைய “தாயக களம்” நிகழ்ச்சியில் அரசியல் ஆய்வாளர் ஜோதிலிங்கம் அவர் கள் கலந்து கொண்டு சமகால அரசி யல் நிலவரங்கள் குறித்து கருத்துபகிர்கிறார்.
கேள்வி :
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கம் என்ன?
பதில் :
பொதுவாக சட்டங்கள் மக்களுக்காக உருவாக் கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. ஆனால் நடை முறையில் பலசட்டங்கள் அரசின் அதிகாரத்தை பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்படுகின்றன. புதிய பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமும் அந்த வகையிலேயே அரசை பாதுகாக்கும் சட்டமாகத் தோன்றுகிறது.
1979ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பயங் கரவாத தடைச் சட்டம் தமிழர்களின் அரசியல் போரா ட்டத்தைஅடக்குவதற்காக உருவாக்கப்பட்டது. அந்தச் சட்டம் பல தசாப்தங்கள் நடைமுறையில் இருந்து தமிழ் மக்களைகடுமையாக பாதித்தது. ஆயுதப் போராட்டம் அடக்கப்பட்டாலும், தமிழர்களின் அரசியல் பிரச்சினை தீரவில்லை. அந்தஅரசியல் பிரச்சினை மீண்டும் எழுச்சி பெறக்கூடும் என்ற அச்சமே புதிய சட்டத்தின் அடிப்படை காரணமாக உள்ளது.
கேள்வி :
இந்தச் சட்டத்தின் பிரதான இலக்கு யார்?
பதில் :
முஇந்த சட்டத்தின் பிரதான இலக்கு தமிழ் மக்களும், அவர்களின் அரசியல் செயற்பாடுகளுமே என்று கூறலாம். தமிழர்களின் அரசியல் உரிமைப் போராட் டத்தை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த சட்டம் உருவாக் கப்படுகின்றது.
அரசு வெளிப்படையாக இதை ஒப்புக்கொள்ள வில்லை என்றாலும், சட்டத்தின் உள்ளடக்கம் தமிழர்களின் அரசியல்செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் வகையில் வடிவ மைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்தின் GSP+ சலுகை யைத் தொடரப் பெறுவதற்காக பழைய பயங்கர வாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது. அந்த நிபந்தனையை பூர்த்தி செய்ததாக காட்டுவதற்காகவே புதிய சட்டம் கொண்டு வரப்படுகிறது.
கேள்வி :
இந்த சட்டத்தில் உள்ள ஆபத்தான அம்சங்கள் என்ன?
பதில் :
இந்த சட்டத்தில் “பயங்கரவாதம்” என்ற சொல் லுக்கு மிக விரிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்ட இயக்கங்களின் அரசியல் நோக்கங்களை ஆதரிக்கும் கருத்துக்களை வெளியிட்டால்கூட அதுபயங் கரவாதமாகக் கருதப்படக்கூடிய சூழல் உருவாகிறது.
ஒரு அரசியல் கருத்தை வெளிப்படுத்துவது கூட குற்றமாக மாறக்கூடிய நிலை ஏற்படுகிறது. போராட்டம் நடத்தினாலும்பயங்கரவாதமாக வரையறுக்க முடியும்.
மேலும், காணிகளை தடை செய்யப்பட்ட பகுதி களாக அறிவிக்கும் அதிகாரம் அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது.விசாரணை அதிகாரம் போலீசுக்கு மட்டுமின்றி ராணுவத் துக்கும் வழங்கப்பட்டுள்ளது. விசாரணை இல்லாமல் இரண்டுமாதங்கள் வரை கைது செய்து வைத்திருக்க முடியும்.
இந்த அம்சங்கள் அனைத்தும் இந்த சட்டம் பழைய பயங்கரவாத தடைச் சட்டத்தை விடவும் கடுமையா னதாகமாறக்கூடும் என்பதைக் காட்டுகின்றன.
கேள்வி :
இந்த சட்டம் ஏன் அரசியல் ரீதியாக முக்கிய மானது?
பதில் :
இந்த சட்டம் அரசியல் ரீதியாக மிகவும் முக்கிய மானது. ஏனெனில் இது அரசின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தும்ஒரு கருவியாக மாறும். பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ள அரசு க்கு இந்த சட்டத்தை நிறைவேற்றுவது சாத்தியமானதாக உள்ளது. ஆனால் தமிழ் மக்களின் சம்மதம் இல்லாமல் சட்டம் கொண்டு வரப்படுமானால், அது அரசியல் ரீதியாக பெரும்நெருக்கடியை உருவாக்கும். தமிழ் அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்தால், அரசுக்கு அரசியல் அழுத்தம் ஏற்படும். அதேநேரத்தில் மக்கள் மத்தியில் உருவாகும் அரசியல் எழுச்சி அரசுக்கு பெரும் சவாலாக மாறும்.
கேள்வி :
தமிழர்கள் எவ்வாறு இந்த சட்டத்தை எதிர்க்க முடியும்?
பதில் :
தமிழர்கள் பல்வேறு அரசியல், சமூக மற்றும் சர்வதேச களங்களில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
அரசு அதிகமாக அச்சப்படுவது உலகளாவிய அரசியல் போராட்டத்தையே. முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வுகள், மாணவர் போராட்டங்கள் போன்றவை சர்வதேச கவனத்தை ஈர்த்தன. அதேபோல், தமிழ் மக்களின் அரசியல் போராட்டம் சர்வதேச அளவில் வலுப்பெற்றால், அது அரசுக்கு பெரும்அழுத்தத்தை ஏற்படுத்தும். பாராளுமன்ற அரசியல், மக்கள் இயக்கம், சர்வதேச ஆதரவு ஆகிய மூன்றையும் ஒருங்கிணைத்தால்தான் இந்த சட்டத்திற்கு எதிரான உண்மையான போராட்டம் உருவாகும்.
கேள்வி :
ஜனாதிபதி வடமாகாணத்தில் சுதந்திரமாக நடைபயணம் செய்தது என்ன அர்த்தம்?
பதில் :
ஜனாதிபதி எந்தவித பெரிய பாதுகாப்பும் இல்லாமல் வடமாகாணத்தில் நடைபயணம் செய்தது முக்கியமான அரசியல்செய்தியாக மாறியது. ஒரு நாட்டின் தலைவன் எந்தவித அச்சுறுத்தலும் இல்லாமல் வடக்கில் சுதந்திரமாக நடக்க முடிந்தால், அரசை பாதுகாக்கும் பெயரில் கடுமையான பயங்கரவாத சட்டம் ஏன் தேவை என்ற கேள்வி எழுகிறது. இது தமிழ் இளைஞர்கள் மத்தியில் உருவான நியாயமான சந்தேகம். பாதுகாப்பு அச்சுறுத்தல் இல்லாத சூழலில்கடுமையான சட்டம் தேவைப்படுமா என்ற கேள்வி அரசின் நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.
கேள்வி :
வடக்கு–கிழக்கு மக்களை அரசாங்கம் ஈர்க்க முயற்சிப்பது பற்றி உங்கள் கருத்து?
பதில் :
அரசாங்கம் வடக்கு–கிழக்கு மக்களை தங்கள் பக்கம் ஈர்க்க மிகவும் திட்டமிட்ட முறையில் செயல்படுகிறது. சமூகநிகழ்வுகள், அரசியல் நடவடிக்கைகள், வளர்ச்சி திட்டங்கள் போன்றவற்றின் மூலம் மக்கள் ஆதரவைப் பெறமுயற்சிக்கிறது.
அதே நேரத்தில் தமிழ் தேசிய கட்சிகள் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி உருவாகியுள்ளது. ஒருங்கிணைந்த அரசியல்இல்லாமை, கொள்கை தெளிவின்மை, மக்கள் பிரச்சினைகளில் போதிய கவனம் இல்லாமை போன்ற காரணங்களால்சிலர் புதிய அரசியல் இயக்கங்களை நோக்கி நகர்கின்றனர். இது தமிழ் அரசியலின் மிகப்பெரிய சவாலாகும்..
கேள்வி :
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தமிழ்நாடு சென்றது அரசியல் ரீதியாக எவ்வளவு முக்கியம்?
பதில் :
தமிழ்நாடு மற்றும் இந்திய அரசியல் தொடர்புகளை வலுப்படுத்துவது இலங்கைத் தமிழர் அரசியலுக்கு மிகவும்முக்கியமானது. இந்தியாவின் நிலைப்பாடு இல்லாமல் இலங்கை அரசியல் மாற்றங்களை ஏற்படுத்த முடியாது. தமிழ்நாட்டின் ஆதரவுஇல்லாமல் இலங்கைத் தமிழர் பிரச்சினையை சர்வதேச அளவில் முன்னெடுக்க முடியாது.
அந்த வகையில் இந்தப் பயணம் வரவேற்கத்தக்கது. ஆனால் வெளிநாட்டு ஆதரவை மட்டுமே நம்புவது போதாது. தாயகத்தில் மக்களை ஒருங்கிணைக்கும் அரசியல் இயக்கம் உருவாக வேண்டும்.
தாயகத்தில் அரசியல் எழுச்சி இல்லாமல் வெளி நாட்டு முயற்சிகள் மட்டும் பெரிய மாற்றத்தை உருவாக்க முடியாது.
கேள்வி :
தமிழ் அரசியலின் எதிர்கால பாதை என்ன?
பதில் :
தமிழ் அரசியல் தற்போது ஒரு முக்கிய திருப்புமுனையில் உள்ளது. ஒருங்கிணைந்த அரசியல் இல்லாமல், மக்கள்ஆதரவு இல்லாமல் எந்த அரசியல் இயக்கமும் வெற்றி பெற முடியாது.
தமிழ் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து அரசியல்செயல்பட வேண்டும். அதே நேரத்தில் சர்வதேச அரசியல், இந்திய அரசியல், மக்கள் இயக்கம் ஆகிய மூன் றையும் இணைத்த ஒரு அரசியல்பாதை உருவாக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் பாதுகாக்கப்பட முடியும்.
கேள்வி :
முடிவாக நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பதில் :
புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் ரீதியாக தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட ஒரு சட்ட மாகவேபார்க்கப்படுகிறது. இதனை எதிர்கொள்ள தமிழர்கள் அரசியல், சமூக மற்றும் சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த போராட் டத்தைமுன்னெடுக்க வேண்டும்.
தமிழ் அரசியல் சக்திகள் ஒன்றிணைந்து மக்களி டையே நம்பிக்கையை உருவாக்க வேண்டும். தாயகத்தில் அரசியல் எழுச்சி உருவாகும்போதுதான் வெளிநாட்டு ஆதரவும் பயனளிக்கும். அதுவே தமிழ் அரசியலின் எதிர் காலத்திற்கு மிக முக்கியமான பாதையாகும்.