கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விமான நிலையத்திற்கு செல்லும் பல வீதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளமையால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்திற்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனம், பயணிகள் விமான நிலைய முனையத்திற்கு பார்வையாளர்களை அழைத்து வர வேண்டாம் என வலியுறுத்தியுள்ளது.
சவாலான சூழ்நிலைகள் இருந்தபோதிலும், விமான நிலையத்தை தொடர்ந்து இயக்குவதில் வரும் பயணிகளின் ஒத்துழைப்பையும் புரிதலையும் பாராட்டுவதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (தனியார்) நிறுவனம் தெரிவித்துள்ளது.



