மன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல்

23 64a862bb2dafd e1688789149841 மன்னார் நடுக்குடா கடற்கரையில் கரை தட்டிய இந்திய கப்பல்

இந்தியாவிற்குச் சொந்தமானது என கருதப்படும் கப்பல் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (7) மாலை மன்னார் நடுக்குடா கடல் பகுதியில் கரை தட்டி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக கரை தட்டிய கப்பலை கடற்படையினர் மீட்டு நடுக்குடா கடற்கரை பகுதிக்கு கொண்டு வந்துள்ளனர்.

அந்தக் கப்பலில், 11 பணியாளர்கள் உள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து, கடற்படை விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குறித்த கப்பல் கடற்படையால் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.

மேலும்  கப்பல் மற்றும் பாச் எனப்படும் கொள்கலன் தாங்கி ஆகியவற்றை மீட்பதற்காக இந்தியாவிலிருந்து கப்பலொன்று இலங்கைக்கு வரவுள்ளது.

குறித்த கப்பல் இன்று மாலை 5 மணியளவில் நாட்டை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இலங்கை கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த கப்பலை பொதுமக்கள் சென்று பார்வையிட்டு வருகின்றனர்.