அம்பாறை -பாடசாலை வளாகத்தில் நின்ற சிறுமி திடீரென காணாமல் போயுள்ளதாக தகவல்

திடீரென காணாமல் போன சிறுமி

அம்பாறை மாவட்டத்தில் சிறுமி ஒருவர் காணாமல்  போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சிறுமி நேற்று மதியம் 2.30 மணியிலிருந்து மாயமாகி உள்ளதாக காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை, கல்முனை காவல்துறை பிரிவிற்குட்பட்ட இஸ்லாமபாத் பகுதியிலுள்ள பெண்கள் சிறுவர் நன்னடத்தை பாடசாலையில் இருந்தே காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போன சிறுமி நிந்தவூர் 2 இமாம் கஸ்ஸாலி வீதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க வதுர்தீன் பாத்திமா சஜானா என முறைப்பாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை கடந்த 2022.05.23 இரவு அக்கரைப்பற்று காவல்துறை பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை ரஹ்மானியாபாத் பகுதியில் 11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த வாரம் பண்டாரகம, அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், நாட்டில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியருந்த நிலையில் மேலும் சிறுமிகள் காணாம் போகும் நிலை பெற்றோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tamil News