ஈரானை விட்டு ‘இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்குள்’ அமெரிக்கா வெளியேறும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
எந்தச் சூழ்நிலையிலும் ஈரான் அணு ஆயுதங்களைப் பெறக்கூடாது என்பது மட்டுமே தனது “ஒரே குறிக்கோள்” என்றும், அந்த இலக்கு “இப்போது எட்டப்பட்டுவிட்டது” என்றும் அவர் கூறினார்.
“ஈரானில் எங்களது பணிகளை நாங்கள் இறுதி செய்து வருகிறோம்,” என்று கூறிய அவர், அமெரிக்கா “அநேகமாக இரண்டு வாரங்களுக்குள் அல்லது பணிகளை முடிக்க இன்னும் சில நாட்கள் கூடுதலாக எடுத்துக்கொண்டு” ஈரானை விட்டு வெளியேறும் என்றும் கூறினார்.
மேலும், “அவர்களிடம் உள்ள அனைத்தையும் நாங்கள் முற்றிலும் ஒழிக்க விரும்புகிறோம், இருப்பினும் அதற்கு முன்பே ஒரு ஒப்பந்தம் எட்டப்பட வாய்ப்புள்ளது,” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு இன்னும் இருப்பதாகவும், ஆனால் ஈரான் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தாலும் “அதனால் எந்த வித்தியாசமும் ஏற்படப்போவதில்லை” என்றும் அவர் கூறினார்.



