உலகில் மகிழ்ச்சியான நாடுகளின் 2025 ஆம் ஆண்டுக்கான பட்டியல் கடந்த வியாழக் கிழமை(20) வெளியிடப்பட்டுள் ளது. அதில் வழமைபோல நோட் டிக் நாடுகள் முன்னனியில் நிற்கும் அதேசமயம், அமெரிக்கா என்றுமில்லாதவாறு பின்நோக்கி தள்ளப் பட்டுள்ளது. சமூக வாழ்வின் வீழ்ச்சி மற்றும் அரசியல் வேறு பாடுகளே அதற்கு காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் பிரித்தானியாவின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் என்பற்றின் ஆதரவுடன் The Wellbeing Research Centre என்னும் அமைப்பினால் 147 நாடுகளில் வாழும் மக்களின் சுகாதாரம், பொருளாதார நிலை, சுதந்திரமான வாழ்வு, ஊழல் அற்ற நிலை என்பன தொடர்பான காரணிகளை முன்வைத்து இந்த ஆய்வு நிகழ்த்தப்பட்டுள்ளது.
வழமைபோல பின்லாந்து முதலாவது இடத்திலும் அதற்கு அடுத்த இடங்களில் டென்மார்க், ஜஸ்லாந்து, சுவீடன், நெதர்லாந்து, கோஸ்ரா றீக்கா நோர்வே, இஸ்ரேல் லக்சம்போர்க் மற்றும் மெக்சிக்கோ ஆகிய நாடுகள் உள்ளன. மிகவும் பின்தங்கிய நிலையில் ஆப்கானிஸ்த்தான், சியெறா லியோன், லெப னான், மலாவி, சிம்பாபே, பொஸ்வானா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, ஏமன், கொமொரோஸ் மற்றும் லெசோதோ ஆகிய நாடுகள் உள்ளன. அமெரிக்கா 2012 ஆம் ஆண்டு 11 ஆவது இடத்தில் இருந்தபோதும், தற்போது 24 ஆவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் மகிழ்ச்சியின்மை அதி கரிப்பதாகவும் மக்கள் தனியாக சாப்பிடும் வழக்கம் அதிகரித்து வருவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் சீனா 68 ஆவது இடத்தி லும், பாகிஸ்த்தான் 109 ஆவது இடத்திலும் இந்தியா 118 ஆவது இடத்திலும், இலங்கை 133 ஆவது இடத்திலும் இருப்பது இங்கு குறிப் பிடத்தக்கது.