இலங்கையின் நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் அனைத்து கட்சி கூட்டம்

97 Views

இலங்கையின் நெருக்கடி தொடர்பில் இந்தியாவில் இன்று (19) மாலை அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.

இந்திய பாராளுமன்றத்தின் இரண்டு அவைகளையும் சேர்ந்த கட்சித் தலைவர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டம் இந்திய தலைநகர் புது டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கையின் தற்போதைய நெருக்கடி நிலைமை தொடர்பாக விளக்கமளித்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

சுகயீனம் காரணமாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகின்றது.

 

Leave a Reply