இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வுகளை வழங்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும் என்றும், அதுவரை, அனைத்து தரப்பினரும் புரிந்துணர்வுடன் செயல்பட்டு, எதிர்பார்க்கும் நோக்கங்களை அடைவதற்கு அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவார்கள் என்று தான் நம்புவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையின் அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் வெள்ளிக்கிழமை (13) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையில் பணிபுரிந்த ஊழியர்களுக்குரிய அனைத்து உரிமைகளும் புதிய நிறுவனங்களுக்குள் உறுதிப்படுத்தப்படுவதையும், நிறுவனங்களின் கீழ் ஊழியர் உரிமைகளைப் பாதுகாப்பதையும் உறுதி செய்வது அரசாங்கத்தின் நிலைப்பாடு என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இந்த இடைப்பட்ட காலத்தில் புரிந்துணர்வுடன் செயல்பட்டு தமது பங்களிப்பை வழங்குமாறு அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்



