நிர்மலா சீத்தாராமனை சந்தித்தார் அலி சப்ரி

இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தைகளை  மேற்கொண்டுள்ளார்.

தென்கொரியாவில் இடம்பெறும் ஆசிய அபிவிருத்திவங்கியின் மாநாட்டின் போது இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் மிகவும் நெருக்கடியான தருணத்தில் -சவாலான நேரத்தில்  இந்தியா வழங்கிய உதவி மற்றும் ஆதரவிற்கும் இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு தொடர்ந்து இந்தியா வழங்கிவரும் ஆதரவிற்கும்  இந்திய நிதியமைச்சருக்கு அலிசப்ரி நன்றியை தெரிவித்துள்ளார்.