உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின – தாயக மாணவர்கள் சாதனை!

2025 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் தாயக தமிழ் மக்கள் மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்துள்ளனர்.  பெறுபேறுகளின்படி, 8,300 பரீட்சாத்திகள் 3 ‘A’ சித்தியை பெற்றுள்ளனர். அதன்படி, அவர்களில் 7,477 பாடசாலை பரீட்சாத்திகளும், 823 தனிப்பட்ட பரீட்சாத்திகளும் அடங்குகின்றனர்

இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளின்படி, 30,898 பரீட்சாத்திகள் எந்தவொரு பாடத்திலும் சித்தி பெறவில்லை என்றே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு இரண்டு இலட்சத்து 81 ஆயிரத்து 810 மாணவர்கள் தோற்றியிருந்தனர்.

அவர்களில் ஒரு இலட்சத்து 76 ஆயிரத்து 527 மாணவர்கள் பல்கலைக்கழங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளதாகதாகவும் அதேநேரம், 111 விண்ணப்பதாரர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை, வெளியாகிய உயர்தர பெறுபேறுகளின் அடிப்படையில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தினை சேர்ந்த தெய்வேந்திரன் திருக்குமரன் அகில இலங்கை ரீதியில் முதலாமிடம் பெற்றுள்ளார்.
குறித்த மாணவனை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் நேரில் சென்று பாராட்டியுள்ளார்.

பௌதீக விஞ்ஞான பாடத்தில் அவர் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.
இதேவேளை, பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய மாணவரான சுபைதீன் முஹம்மட், வணிகப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.