வன்னி  பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் காணிகளை விடுவிக்க நடவடிக்கை

வன்னி  பெரு நிலப்பரப்பில் 101,762.75 ஏக்கர் நிலங்களை மக்களுக்காக விடுவிக்க இருக்கின்றோம் என சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.

வவுனியா மதுரா நகர் பகுதியிலே தாவரவியல் பூங்கா மற்றும் வன்னிவிளாங்குளம் பகுதியில் எக்கோ பூங்கா என்பவற்றை அமைப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சுற்றுச்சூழல் அமைச்சர் தம்மிக்க படபெந்தி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி, உப்பாலி சமரசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன், மாவட்ட செயலாளர் சரத் சந்திர உட்பட பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இக்கூட்டத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்,

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எங்களுடைய அரசாங்கம் கடந்த ஜூலை மாதம் ஐந்தாம் திகதி வன பாதுகாப்பு இடங்களாக கிட்டத்தட்ட 30 இடங்களை அடையாளம் கண்டு, அதனை பாதுகாக்கின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இருந்தது. குறிப்பாக  30 வருட கால யுத்தம் காரணமாக ஏற்பட்ட இடப்பெயர்வும், அதன் பின்னரான காலத்தில் தங்களது இடங்களுக்கு மக்கள் மீள்குடியேறியும் இருந்தனர்.