ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பணிப்பெண்ணாக சென்றுள்ள 154 இலங்கையரை நாட்டுக்கு அழைத்துவர முதல் கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்தெரிவித்துள்ளது.
இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலா விசாவில் வெளிநாடு சென்றுள்ளதாகவும் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு தேவையான அமைச்சரவை அனுமதியை அமைச்சர் பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பயிற்சி மற்றும் ஆட்சேர்ப்பு பிரிவின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனரத் யாப்பா தெரிவித்துள்ளார்.